/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாலம் கட்டுமான பணியில் தொய்வு; 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
/
பாலம் கட்டுமான பணியில் தொய்வு; 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
பாலம் கட்டுமான பணியில் தொய்வு; 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
பாலம் கட்டுமான பணியில் தொய்வு; 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
ADDED : பிப் 05, 2025 10:03 PM

சிவகங்கை; சிவகங்கை அருகே பனங்காடியில் 6 மாதமாக பாலம் கட்டுமான பணி முடிவு பெறாததால் 10 கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை அருகே உள்ளது பனங்காடி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து சாத்தனி கிராமம் வரை புதிய ரோடு அமைக்கும் பணி 6 மாதமாக நடந்து வருகிறது. பனங்காடி கண்மாய் வரத்து கால்வாய் பகுதியில் புதிய பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. கடந்த மாதங்களில் பெய்த மழையால் கண்மாய் முழுவதும் தண்ணீர் நிறைந்துள்ளது. இந்த மழை தண்ணீர் வரத்து கால்வாயிலும் தேங்கியுள்ளது.
தண்ணீரை வெளியேற்ற முடியாமல் பாலம் கட்டுமான பணியை நிறுத்தியுள்ளனர். பணியை தொடங்க வேண்டும் என்றால் கண்மாய்க்கும் வரத்து கால்வாய்க்கும் இடைப்பட்ட பகுதியை அடைத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும். இந்த பாலம் கட்டுமானப் பணி முடிந்தால் தான் முழுவதுமாக சாலை அமைக்க முடியும். இந்த பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
பனங்காடி, சாத்தனி, ராணியூர், விசயமாணிக்கம், உடவயல், ஒய்யவந்தான், பேச்சாத்தகுடி, கிளுவச்சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமத்து மக்கள் 12 கி.மீ., சுற்றி நாட்டரசன்கோட்டை வழியாக சுற்றி சிவகங்கை வரவேண்டிய சூழல் உள்ளது. பள்ளி கல்லுாரி வரும் மாணவர்கள் தினமும் அவதிப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் வரத்துகால்வாயில் உள்ள மழைத்தண்ணீரை வெளியேற்றிவிட்டு பாலம் கட்டுவதற்கான பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.