ADDED : செப் 16, 2025 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை அருகே அன்னவாசல் கிராமத்தை சேர்ந்த இளைஞர் காளீஸ்வரன் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் மானாமதுரையில் மாவட்ட தலைவர் முத்துராமலிங்க பூபதி தலைமையில் நடந்தது.
மாநில தலைவர் செல்லக்கண்ணு மார்க்.கம்யூ., மாவட்ட செயலாளர் மோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் கருப்புசாமி, தியாகி இமானுவேல் பேரவை மாநில செயலாளர் வேல்முருகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணை தலைவர் சாந்தி, வி.சி.க., மானாமதுரை ஒன்றிய செயலாளர் மாணிக்கம்,மார்க்.கம்யூ., ஒன்றிய செயலாளர் முனியராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளர் வீரய்யா பேசினர்.