ADDED : மார் 13, 2024 12:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அரண்மனை வாசலில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சகாயம் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆன்ட்ரூஸ், மாவட்ட துணை செயலாளர் பாண்டி, நகர தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட தலைவர் காளைலிங்கம், வி.தொ.ச., மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். புதிய மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும். ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும்.
ஓய்வூதியம் ரூ.6000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

