ADDED : அக் 24, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: கூட்டுறவுத்துறை பதிவாளரை
மாற்ற கோரி சிவகங்கையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கூட்டுறவு துறை ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் வினோத் ராஜா தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ், மாவட்ட செயலாளர் கிங்ஸ்டன் டேவிட், மாவட்ட பொருளாளர் பொன்னையா முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் மாரி, மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், சிவகங்கை வட்ட கிளை செயலாளர் முத்தையா, சின்னப்பன், நாகராணி, பாண்டி, நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
