ADDED : நவ 04, 2026 03:26 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் கலெக்டர் அலுவலக ஆர்ச் முன்பாக அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய அரசை கண்டித்து இந்திய கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட துணைச் செயலாளர் மருது தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கோபால் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் பேசினார். நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர செயலாளர் சகாயம் நன்றி கூறினார்.
