/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடர் மழையால் திருப்புவனம் திதி பொட்டலில் தவித்த பக்தர்கள்
/
தொடர் மழையால் திருப்புவனம் திதி பொட்டலில் தவித்த பக்தர்கள்
தொடர் மழையால் திருப்புவனம் திதி பொட்டலில் தவித்த பக்தர்கள்
தொடர் மழையால் திருப்புவனம் திதி பொட்டலில் தவித்த பக்தர்கள்
ADDED : டிச 14, 2024 06:33 AM

திருப்புவனம் : திருப்புவனம் திதி பொட்டலில் கூரை இல்லாததால் மழையில் நனைந்தபடியே பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கினர்.
மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்புவனம் வைகை ஆற்றங்கரைக்கு வந்து செல்கின்றனர்.
பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குளிக்கவும், கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. பக்தர்கள் பலரும் வைகை ஆற்றங்கரையில் குப்பைக்கு மத்தியில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக பெய்து வரும் மழை காரணமாக திதி பொட்டல் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
வைகை ஆற்றங்கரையில் போதிய இட வசதி உள்ள நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி திருப்புவனம் பேரூராட்சி சார்பில் கூரை வசதி ஏற்படுத்தி தர வேண்டும், இதன் மூலம் பேரூராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும்.