/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தர்ம முனீஸ்வரர் கோயில் பூச்சொரிதல் விழா
/
தர்ம முனீஸ்வரர் கோயில் பூச்சொரிதல் விழா
ADDED : மே 31, 2025 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி:காரைக்குடி செஞ்சை தர்ம முனீஸ்வரர் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
70 வது ஆண்டு பூச்சொரிதல் விழா மே 23ஆம் தேதி தொடங்கியது. தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. நேற்று பூச்சொரிதல் விழா நடந்தது. கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக அலகு குத்தி, பால்குடம் எடுத்து பக்தர்கள் கோயிலை வந்தடைந்தனர்.
கோயில் முன்பு பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் காரைக்குடி செஞ்சை உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.