/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவ உபகரணங்களின்றி ‛'டயாலிசிஸ்' மையம் தாமதம்
/
மருத்துவ உபகரணங்களின்றி ‛'டயாலிசிஸ்' மையம் தாமதம்
ADDED : ஏப் 28, 2025 05:52 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கட்டப்பட்ட அரசு டயாலிசிஸ் சென்டருக்கு உபகரணங்கள் வராததால் திறப்புவிழா தாமதமாகி வருகிறது.
இப்பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., யின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் டயாலிசிஸ் சென்டர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்., மாதம் பூமி பூஜை போடப்பட்டு கட்டுமானப் பணிகள் துவங்கியது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு மாதங்களைக் கடந்தும் டயாலிசிஸ் உபகரணங்கள் இன்னும் வராததால் கட்டடம் பூட்டிக் கிடக்கிறது. பல லட்சம் ரூபாய் செலவு செய்தும் டயாலிசி சென்டர் தாமதமாகி வருவதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
இப்பகுதியை சேர்ந்த சிறுநீரக நோயாளிகள் பலர் மேலூர், மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று அதிக செலவு செய்து டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். எனவே தேவையான உபகரணங்களை விரைந்து பொருத்தி டயாலிசிஸ் சென்டரை திறக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.