/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி புக்குளம் காலனியில் இடிந்து விழும் நிலையில் வீடுகள்
/
இளையான்குடி புக்குளம் காலனியில் இடிந்து விழும் நிலையில் வீடுகள்
இளையான்குடி புக்குளம் காலனியில் இடிந்து விழும் நிலையில் வீடுகள்
இளையான்குடி புக்குளம் காலனியில் இடிந்து விழும் நிலையில் வீடுகள்
ADDED : அக் 03, 2024 04:47 AM

இளையான்குடி: இளையான்குடி அருகே புக்குளம் காலனியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கல்லடி திடல் ஊராட்சிக்குட்பட்ட புக்குளம்காலனியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட காலனி வீடுகள் தற்போது இடிந்து விழும் நிலையில் மிகவும் மோசமாக உள்ளது.
அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வீடுகளின் கூரை அவ்வப்போது இடிந்து விழுவதால் வீட்டிற்குள் வசிக்க முடியாத நிலையில் தவித்து வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மழைக்காலங்களில் வீடுகள் அமைந்துள்ள பகுதி மிகவும் தாழ்வாக இருப்பதால் மழைநீர் வீடுகளுக்குள் தேங்கி நிற்பதாலும்,விஷப் பூச்சிகளின் நடமாட்டத்தினாலும் வீட்டிற்குள் இருக்க முடியாத நிலையில் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் நலன் கருதி இந்த காலனி வீடுகளை மராமத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.