/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே ஸ்டேஷனில் பராமரிப்பில்லாத கழிப்பறை மாற்றுத்திறனாளிகள் புகார்

ADDED : மே 07, 2025 02:13 AM
காரைக்குடி: காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பராமரிப்பின்றி பாழாகி வருகிறது.
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சென்னை, ராமேஸ்வரம், செங்கோட்டை ,புதுச்சேரி, திருவாரூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார், அரசு வேலை செய்வோர் என தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
பயணிகளுக்கான நடைமேடை அருகே ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை கட்டடம் உள்ளது. இதில் மாற்றுத்திறனாளி கழிப்பறை கட்டடம் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. உபகரணங்கள் உடைந்து கிடப்பதால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.