/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம்
/
கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம்
கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம்
கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம்
ADDED : ஜன 13, 2025 06:42 AM
காரைக்குடி: கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கவுன்டர்' இன்றி, தனியார் மூலம் குறைந்த டிக்கெட் மட்டுமே வினியோகம் செய்வதால், பயணிகளுக்கு டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இங்குள்ள ரயில்வே ஸ்டேஷன் அருகே அழகப்பா பல்கலை., அரசு பொறியியல் கல்லுாரி, சிக்ரி வளாகம் உள்ளது. இதனால் ரயிலில் வரும் பயணிகள் அதிகளவில் கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இந்த ஸ்டேஷனில் ரயில்வே ஊழியர்கள், டிக்கெட் கவுன்டர் இன்றி தனியார் மூலம் ரயில் வரும் நேரங்களில் மட்டுமே டிக்கெட் வினியோகிக்கின்றனர்.
புதுக்கோட்டை, திருச்சி, சென்னை செல்ல கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷனை அதிக பயணிகள் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், இங்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளுக்கான டிக்கெட் வினியோகம் செய்கின்றனர். கூடுதலாக பயணிகள் வந்தால் டிக்கெட் கிடைக்காமல், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
எனவே கோட்டையூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் கவுன்டர் அமைத்து, பயணிகளின் வருகைக்கு ஏற்ப டிக்கெட் வினியோகம் செய்ய வேண்டும்.