/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பேரிடர் மீட்பு குழு செயல் விளக்கம்
/
பேரிடர் மீட்பு குழு செயல் விளக்கம்
ADDED : பிப் 14, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் துணை கமாண்டர் சங்கீத் ெஹய்க்வாட் தலைமையில் எஸ்.ஐ., பிரதீப் பட் உட்பட 25 வீரர்கள் கலெக்டர் அலுவலகத்தில் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., பிருந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயல்முறை மீட்பு பணியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.

