/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாறைக்குள் சிக்கியோரை மீட்க பேரிடர் மீட்பு படை வருகை
/
பாறைக்குள் சிக்கியோரை மீட்க பேரிடர் மீட்பு படை வருகை
பாறைக்குள் சிக்கியோரை மீட்க பேரிடர் மீட்பு படை வருகை
பாறைக்குள் சிக்கியோரை மீட்க பேரிடர் மீட்பு படை வருகை
ADDED : மே 21, 2025 04:54 AM
சிங்கம்புணரி : மல்லாக்கோட்டை கிரஷர் குவாரி விதிப்படி செயல்படுகிறதா என்பதை கனிமவளத்துறை விசாரணைக்கு பின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை மேகா புளூமெட்டல் குவாரியில் பாறை சரிந்து 5 பேர் பலியாகியுள்ளனர்.
பாறைக்குள் சிக்கியுள்ள பொக்லைன் டிரைவர் ஓடிசா ஹர்ஜித் 28, உடலை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையினர் வர உள்ளனர். அவர்களது மீட்பு பணிக்கு பின்னரே, பாறைக்குள் சிக்கியுள்ளோர் முழுவிபரம் தெரிய வரும். மேலும், மேகாபுளூ மெட்டல் கிரஷர் குவாரிக்கு கனிம வளத்துறை வழங்கிய லைசென்சில் அனுமதித்த அளவிற்கு மேல் கற்களை எடுத்துள்ளார்களா என்பது குறித்து கனிம வளத்துறையினர் ஆய்வு செய்வார்கள், என்றார்.