/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
4 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பணி குறித்து விவாதம்
/
4 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பணி குறித்து விவாதம்
ADDED : ஜன 20, 2024 04:47 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய சாதாரணக் கூட்டத்தில் 'நான்கு ஆண்டுகளாக கிடப்பிலுள்ள பிரச்னை' குறித்து கவுன்சிலர்கள் விவாதித்தனர்.
பி.டி.ஓ.,அருள் பிரகாசம் முன்னிலை வகித்தார். தலைவர் சண்முகவடிவேல் தலைமை வகித்தார். இளநிலை உதவியாளர் மாணிக்கராஜன் 20 தீர்மானங்களை வாசித்தார்.
பின்னர் நடந்த விவாதம்:
தோட்டக்கலைத்துறை முத்துக்குமார்: தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் பசுமைக்குடில் அமைக்க 50 சதவீதம் மான்யம் வழங்கப்படுகிறது. ச.மீ.க்கு ரூ .455 மான்யமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் ஆதார், நில ஆவணங்களுடன் முன்பதிவு செய்யலாம். நுண்ணிய பாசனத் திட்டத்தின் கீழ் பெரிய விவசாயிகளுக்கு 100 சதவீதம், சிறிய விவசாயிகளுக்கு 75 சதவீத மான்யம் வழங்கப்படும்.
பழனியப்பன்: வடக்கூர் பகுதியில் ரோடு அமைக்காமல் உள்ளது. நான்கு ஆண்டுகளாக வனத்துறை அனுமதி கிடைக்கவில்லை.
தலைவர்: வனத்துறை அனுமதி கோரப்பட்டுஉள்ளது.சில விதிமுறைகளால் தாமதம் ஆகிறது.
பழனியப்பன்: புதுக்கோட்டை மாவட்ட வனப்பகுதியில் ரோடு போடப்பட்டுள்ளது. விரைவாக அனுமதி பெற வேண்டும். இலுப்பனேந்தல் கோயில் ரோடு போடவேண்டும்.
கலைமாமணி : மலம்பட்டி ஊர்காவலர் தெருவரை ரோடு போடவேண்டும். குடிநீர் ஊரணிக்கு தடுப்புசுவர் கட்டவேண்டும்.
தலைவர் : இந்த வாரம் அதற்கான அனுமதி பெறப்படும்.
ராமசாமி: வேலங்குடி கருப்பர் கோயில் ரோடு அமைக்க வேண்டும். திருவிழா துவங்க உள்ளது. துவக்கப்பள்ளி கட்டடம் சேதம் அடைந்துள்ளது.அதனை சீரமைக்க வேண்டும்.
பி.டி.ஓ.,: அதற்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது விரைவில் சீரமைக்கப்டும்
தலைவர்: பள்ளி என்பதால்அசம்பாவிதம் நேரும் முன் விரைவாக சீரமைக்க வேண்டும். பள்ளிகளில் திட்டப்பணிகள் குறித்து எழுதும் போது எழுத்துப்பிழையின்றி எழுத வேண்டும்.
சகாதேவன்: பிராமணம்பட்டி பள்ளியில் வகுப்பு நடக்கும் கட்டடத்திற்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கேட்டால்பராமரிப்பு பணி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. பிராமணம்பட்டி பாலம் சேதமடைந்துள்ளது.
பழனியப்பன்: ஆ.தெக்கூர் சமுதாயக் கூடம், வாரச்சந்தை அருகில் கழிப்பறை பராமரிப்பில்லாமல் உள்ளது.
நெற்குப்பை அங்கன்வாடி கண்காணிப்பாளர்: ஒழுகமங்கலம், புரந்தன்பட்டி அங்கன்வாடி கட்டடங்கள் சேதமடைந்துஉள்ளது. மாணவர்கள் உட்கார இடம் இல்லை
சகாதேனன்: திருப்புத்துார் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள யூனியனுக்கு சொந்தமான பழைய கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டி வருவாய் ஏற்படுத்த திட்டமிட்டும் இதுவரை பழைய கட்டடம் இடிக்கப்படவில்லை.,
பி.டி.ஓ., இடிக்க அனுமதி வாங்கப்பட்டுள்ளது. விரைவில் இடிக்கப்படும்.
சகாதேவன்: ஆய்வு மாளிகை அருகில் செல்லும் ரோடு புனரமைக்க வேண்டும். மின்துறையினர் கூட்டத்திற்கு வருவதில்லை.
தலைவர்: அந்த ரோடு பேரூராட்சிக்கு சொந்தமானது. மின்துறையினர் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
துணை வ.வ.அ.(நிர்வாகம்) சேதுராமன் நன்றி கூறினார்.
கவுன்சிலர்கள், பிறதுறை அலுவலர்கள்,பணியாளர்கள் பங்கேற்றனர்.