/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் குடியிருப்புகளில் பன்றிகள் வளர்ப்பால் நோய் அபாயம்
/
மானாமதுரையில் குடியிருப்புகளில் பன்றிகள் வளர்ப்பால் நோய் அபாயம்
மானாமதுரையில் குடியிருப்புகளில் பன்றிகள் வளர்ப்பால் நோய் அபாயம்
மானாமதுரையில் குடியிருப்புகளில் பன்றிகள் வளர்ப்பால் நோய் அபாயம்
ADDED : ஆக 23, 2025 11:45 PM

மானாமதுரை: மானாமதுரை காந்திஜி நகரில் ஒரு சில வீடுகளில் பன்றிகளை வளர்ப்பதால் அப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மானாமதுரை தாயமங்கலம் ரோட்டில் உள்ள காந்திஜி நகரில் ஏராளமான துாய்மை பணியாளர்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள சிலர் தங்களது வீடுகளின் பின்புறம் உள்ள காலியிடங்களில் ஏராளமான பன்றிகளை வளர்த்து வருகின்றனர். பன்றிகளுக்கு ஓட்டல்களில் மிச்சமாகும் உணவு மற்றும் சாப்பிட்ட இலைகளை உணவாக கொடுத்து வருவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் பன்றிகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் பழைய தபால் ஆபீஸ் தெரு, பட்டறை தெரு,காந்திஜி நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு பல்வேறு நோய் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
பொதுமக்கள் கூறிய தாவது: மானாமதுரை காந்திஜி நகரில் பன்றிகளை வளர்க்கும் சிலர் ஓட்டல்கள், திருமண மஹாலில் கிடைக்கும் எச்சில் இலைகளையும், அழுகிப்போன பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு வந்து உணவாக கொடுக்கின்றனர்.
இப்பகுதியில் சுற்றி திரியும் பன்றிகள் கழிவு நீர் வாய்க்கால்களிலும், நீர் நிலைகளிலும் புரளுவதால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது.
நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் நலன் கருதி காந்திஜி நகர் குடியிருப்பு பகுதியில் வளர்க்கப்படும் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.