ADDED : அக் 26, 2025 06:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரையில் தெருக்களில நடமாடும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகாலையில் நடைப்பயிற்சி செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமா னோர் தினமும் நாய் கடிபட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக சென்று வருகின்றனர்.
சைக்கிள் மற்றும் டூவீலர்களில் செல்பவர்கள் அவற்றின் மீது மோதி காயமடைந்து வருகின்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த வாரம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 5 நாட்கள் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றனர்.

