/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் ஒரே நாளில் 10 பேரை கடித்து குதறிய நாய்கள்
/
இளையான்குடியில் ஒரே நாளில் 10 பேரை கடித்து குதறிய நாய்கள்
இளையான்குடியில் ஒரே நாளில் 10 பேரை கடித்து குதறிய நாய்கள்
இளையான்குடியில் ஒரே நாளில் 10 பேரை கடித்து குதறிய நாய்கள்
ADDED : நவ 23, 2025 04:07 AM
இளையான்குடி: இளையான்குடியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10க்கும் மேற் பட்டோர் நாய்கடி யால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் சுற்று வட்டார கிராம பகுதிகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. தினமும் நாய்க்கடியால் பாதிக்கப் படுபவர்களின் எண் ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இளையான்குடியில் சந்தைப்பேட்டை மற்றும் கண்மாய்க்கரை, மெயின் பஜார், புதூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரியும் நாய்கள் அவ்வழியாக செல்லும் மக்களை கடிக்கிறது.
நேற்று மட்டும் வலசை கிராமத்தை சேர்ந்த சிங்கப் பாண்டி 28, இளையான்குடியை சேர்ந்த முகமது ஷேக் 38, சாய்ரா பானு 47, ஷேக் 48, ரபீக் 12 உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோரை நாய்கள் கடித்து இளையான்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றனர்.
உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் நாய்களுக்கு தடுப்பூசி போடப் பட்டாலும் நாய்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் மக்கள் பாதிப்பு தொடர்கிறது.

