/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருமணம் நிச்சயம் இளைஞர் தற்கொலை
/
திருமணம் நிச்சயம் இளைஞர் தற்கொலை
ADDED : நவ 23, 2025 04:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே கோமாளிப்பட்டியைச் சேர்ந்தவர் நவீன் 27. கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் பள்ளியில் படிக்கும் போதே அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
4 மாதத்திற்கு முன்பு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள நவீன் பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். திரு மணம் நிச்சயமான நிலையில் நவீன் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு அந்த பெண்ணின் வீட்டில் நவீன் துாக்கிட்டு இறந்தார். நவீன் தாயார் வசந்தி நகர் போலீசில் புகார் அளித்தார்.

