/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆறாக ஓடும் சாக்கடை... சொட்டு நீராய் குடிநீர் குமுறும் பிரான்மலை மதகுபட்டி மக்கள்
/
ஆறாக ஓடும் சாக்கடை... சொட்டு நீராய் குடிநீர் குமுறும் பிரான்மலை மதகுபட்டி மக்கள்
ஆறாக ஓடும் சாக்கடை... சொட்டு நீராய் குடிநீர் குமுறும் பிரான்மலை மதகுபட்டி மக்கள்
ஆறாக ஓடும் சாக்கடை... சொட்டு நீராய் குடிநீர் குமுறும் பிரான்மலை மதகுபட்டி மக்கள்
ADDED : மார் 08, 2024 01:00 AM

பிரான்மலை: பிரான்மலை ஊராட்சியில் போதிய அடிப்படை வசதி செய்து தரப்படாததால் பொதுமக்கள் குமுறுகின்றனர்.
சிங்கம்புணரி ஒன்றியத்துக்குட்பட்ட இந்த ஊராட்சியில் மதகுபட்டி, அடியார்குளம் பகுதி மக்கள் குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லாமல் பல வருடங்களாக அவதிப்படுகின்றனர்.
இந்த 2 வார்டுகளிலும் பூ கட்டும் தொழில் செய்யும் 400 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள தெருக்குழாய்களில் எப்போதாவது மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 3 சிறிய தொட்டிகளில் ஒன்றில் மட்டுமே அதுவும் சில குடங்களுக்கு மட்டுமே தண்ணீர் வருகிறது.
இந்த இரண்டு தெருக்களிலும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படாததால் வீடுகள் முன்பாக கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
குறிப்பாக அடியார்குளம் பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவில் பல மீட்டர் துாரத்திற்கு சாக்கடை தேங்கி அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.
எம்.சங்கர், ஊராட்சி உறுப்பினர், பி.மதகுபட்டி: 20 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குழாய்கள் பழுதடைந்து தெருக்குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. சில மணி நேரம் மட்டுமே தொட்டிகள் மூலம் தண்ணீர் வருகிறது. மும்முனை மின்சாரம் இல்லாத நேரங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. இருக்கும் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் வீடுகள் முன்பாக கழிவு நீர் ஓடுகிறது, புதிய கால்வாய்கள் அமைக்கப்படவில்லை. ஊராட்சி கூட்டம், கிராம சபை கூட்டங்களில் நான்கு ஆண்டுகளாக வலியுறுத்தியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.
ஆர்.பார்வதி, அடியார்குளம்: வீடுகள் முன்பாக கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. வருடம் முழுவதும் கொசுக்களால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். கால்வாய் கட்டாமல் பள்ளமாக தோண்டி போட்டுவிட்டார்கள். மழை நீர், கழிவு நீர் தேங்காமல் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார்.

