/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர்
/
சிங்கம்புணரியில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர்
சிங்கம்புணரியில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர்
சிங்கம்புணரியில் ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர்
ADDED : ஜன 03, 2024 06:14 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் முறையாக குடிநீர் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதி செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
இப்பேரூராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் மத்திய அரசின் அம்ருத் 2.0 மற்றும் ஜல்ஜீவன் திட்டத்தில் நேரடியாக காவிரி குடிநீர் வழங்க டெண்டர் விடப்பட்டு பணி நடக்கிறது.
18 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சியில் ஏற்கனவே காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டும் சில இடங்களுக்கு அத்தண்ணீர் முறையாக சென்று சேரவில்லை.
இந்நிலையில் அம்ருத் 2.0 மற்றும் ஜல்ஜீவன் திட்டங்களின் கீழ் சில இடங்களில் கூடுதல் தொட்டிகள் கட்டி தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல வீடுகளுக்கு தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு மேடு பள்ளங்கள் இருந்தன. இதனால் பல வீடுகளுக்கு பேரூராட்சியின் தண்ணீர் சென்று சேர்வதில் சிக்கல் இருந்தது. மேலும் நேதாஜி நகர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு காவிரி நீரை முழுமையாக வழங்க முடியாமல் போர்வெல் தண்ணீரை கலந்தே விநியோகிக்கப்பட்டு வருகிறது.
எனவே திட்டம் முடிக்கப்பட்ட பின்னர் அனைத்து வீடுகளுக்கும் காவிரி குடிநீர் முழுமையாக சென்று சேர்வதை பேரூராட்சி நிர்வாகம் இப்போதே உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.