/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இரட்டை லைசென்ஸ் முறை தற்காலிக கண்டக்டர், டிரைவர் தவிப்பு
/
இரட்டை லைசென்ஸ் முறை தற்காலிக கண்டக்டர், டிரைவர் தவிப்பு
இரட்டை லைசென்ஸ் முறை தற்காலிக கண்டக்டர், டிரைவர் தவிப்பு
இரட்டை லைசென்ஸ் முறை தற்காலிக கண்டக்டர், டிரைவர் தவிப்பு
ADDED : ஏப் 02, 2025 06:48 AM
சிவகங்கை : தமிழக அரசின் இரட்டை லைசென்ஸ் நடைமுறையால் ராமநாதபுரம், சிவகங்கை அரசு போக்குவரத்து கழக கிளையில் தற்காலிகமாக பணிபுரிந்த 550 கண்டக்டர், டிரைவர்கள் தவித்து வருகின்றனர்.
காரைக்குடி அரசு போக்குவரத்து கழக கோட்டத்தின் கீழ் ராமநாதபுரம், சிவகங்கையில் 11 கிளைகள் உள்ளன. இதன் மூலம் புறநகர், டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அரசு, கண்டக்டர், டிரைவர் பற்றாக்குறையை சமாளிக்க, தற்காலிக அடிப்படையில் ஒரு பணிக்கு கண்டக்டருக்கு ரூ.69, டிரைவருக்கு ரூ.70 சம்பளத்தில் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒரு கிளைக்கு 50 க்கும் மேற்பட்ட கண்டக்டர், டிரைவர் என்ற அடிப்படையில் இரண்டு மாவட்ட கிளைகளிலும் 550 க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக அடிப்படையில் 180 பணி நாட்கள் (3 மாதங்கள் ) வேலை செய்துள்ளனர்.
தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த இவர்களை, அரசு நிரந்தரம் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர். இவர்களது தலையில் இடியை இறக்கும் விதமாக' அரசு போக்குவரத்து கழகம் இரட்டை லைசென்ஸ் முறையை அறிமுகம் செய்துள்ளது.
அதன்படி அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் பணியில் சேர்வதற்கு ஒரே நபர் இரண்டு லைசென்ஸ்- பெற்றிருந்தால் மட்டுமே, இனி அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர், டிரைவர் வேலை வழங்கப்படும் என தெரிவித்துவிட்டது.
இதனால் ஒற்றை லைசென்ஸ் எடுத்து, தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்த கண்டக்டர், டிரைவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
எனவே அரசு, இரட்டை லைசென்ஸ் கட்டாய நடைமுறையில் இருந்து, ஏற்கனவே தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்தவர்களுக்கு பணியில் சேர வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி கண்டக்டர்கள், டிரைவர்கள் நேற்று கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துகழுவனிடம் மனு அளித்து சென்றனர்.

