/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா
/
சிவகங்கை மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா
ADDED : ஜூலை 16, 2025 01:19 AM
சிவகங்கை : சிவகங்கை அரு.நடேசன் செட்டியார் நடுநிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா தலைமையாசிரியர் பாண்டியராஜன் தலைமையில் நடந்தது. அரிமா சங்க தலைவர் ரமேஷ் கண்ணன், செயலாளர் துரைப்பாண்டியன், பொருளாளர் செந்தில்குமரன், மண்டலத்தலைவர் முத்துக்கண்ணன், வட்டாரத் தலைவர் முத்துராஜா மாணவர்களுக்கு நோட்டு, நுாலகத்திற்கு புத்தகங்கள் வழங்கினார்.
சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி செயலர் சேகர் தலைமை வகித்தார். மதுரை காமராஜர் பல்கலை இணைப்பேராசிரியர் பாரி பரமேஸ்வரன் கலை இலக்கிய போட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். தலைமையாசிரியர் தியாகராஜன், உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன் சரவணன், பொறுப்பாசிரியர்கள் சந்திரசேகர், சுரேஷ்குமார், மகரஜோதி, சக்திவேல், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் முத்துபஞ்சவர்ணம், பொறுப்பாசிரியர் பாண்டி செல்வி கலந்து கொண்டனர்.
நாட்டரசன்கோட்டை கானாடுகாத்தான் முத்தையா சுப்பையா செட்டியார் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில் காஸ்மாஸ் அரிமா சங்க முன்னாள் தலைவர் பொறியாளர் பாரதிதாசன் கலந்துகொண்டார். தலைமையாசிரியர் பொறுப்பு ஆரோக்கிய ஸ்டெல்லா வரவேற்றார். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் தாமரைச்செல்வி, அகிலாண்டேஸ்வரி கலந்துகொண்டனர்.
பாலமுருகன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, சாய் பால மந்திர் மழலையர் தொடக்கப் பள்ளயில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் மதிவாணி, ஜீவிதா காமராஜர் பற்றி பேசினர். மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
கீழக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் ஆசிரியர் ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். ஆசிரியர் மீனாட்சி வரவேற்றார். ஆசிரியர் கமலம்பாய் வாழ்த்தி பேசினார். மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டி நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் வித்யா நன்றி கூறினார்.
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடந்த கல்வி வளர்ச்சி நாள் விழாவில் வட்டார கல்வி அலுவலர் குமார் தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் சொக்கலிங்கம் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மானாமதுரை
மேலநெட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா பி.டி.ஏ., தலைவர் காசிராஜன் தலைமையில் நடந்தது. தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.எஸ்.எம்.சி., தலைவர் ராஜாத்தி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னாள் மாணவர் லதா பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை வழங்கினார்.பொறுப்பாசிரியர் ஜெயஸ்ரீ தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
தெ.புதுக்கோட்டை எம்.கே.என் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா தலைவர் சத்தியசீலன் தலைமையில் நடந்தது. செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் வரவேற்றார். நிர்வாகிகள் முருகேசன், சீனிவாசன்,தங்கராசு கலந்து கொண்டனர். முட்டகுறிச்சி காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான கல்வி உபகரணங்களை பள்ளிக்கு வழங்கினர்.
திருப்புத்துார்
* திருப்புத்துார் கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தலைவர் ஏ.டி.விக்டர் முன்னிலை வகித்தார். ஆ.பி.சீ.அ.கல்லூரி முன்னாள் வணிகவியல் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியன் காமராஜரின் சிறப்புகளை பேசினார். தாளாளர் ரூபன் வரவேற்றார். பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.
*திருப்புத்துார் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கட்டுரை,கவிதை பலகுரல், வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியை துர்கா வரவேற்றார். முதல்வர் கே.ஆர்.அமுதா, துணை முதல்வர் ஞா. அருள் சேவியர் அந்தோணி ராஜ் பேசினர். தமிழாசிரியர் பா. மதிவாணன் நன்றி கூறினார்.
* கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.எம்.மெட்ரிக் பள்ளியில் தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமை வகித்தார். செயலர் குணாளன் முன்னிலை வகித்தார். ஆசிரியை கௌசல்யா வரவேற்றார். தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் என்.கருப்பையா பங்கேற்றார். போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல்வர் பழனியப்பன் நன்றி கூறினார்.
* திருப்புத்தூர் பாபாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் பாபாஅமீர்பாதுஷா தலைமை வகித்தார். பேராசிரியர் வேலாயுதராஜா சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் கனகா வரவேற்றார். ஆசிரியை சந்தானலெட்சுமி நன்றி கூறினார்.
சிவகங்கை புனித மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் மற்றும் முத்தமிழ் இலக்கிய மன்ற திறப்பு விழா நடந்தது. ஆசிரியர் பயிற்றுநர் காளிராசா தலைமை வகித்தார். கல்வி குழும தலைவர் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், பிரிஜிட் நிர்மலா முன்னிலை வகித்தனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி ஊக்கத்தொகை வழங்கினார். பள்ளி முதல்வர் டெய்சி ஆரோக்கிய செல்வி, துணை முதல்வர் முத்துக்குமார் கலந்து கொண்டனர்.
தேவகோட்டை
தேவகோட்டை ராமகிருஷ்ண நடுநிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நிர்வாகி சோம நாராயணன் தலைமையில் நடந்தது. தலைமையாசிரியர் உமாமகேஸ்வரி வரவேற்றார். ஆசிரியை தாமரைச்செல்வி நன்றி கூறினார்.
தேவகோட்டை 16 வது நகராட்சி நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை அரிஸ்டோ லயன்ஸ் சங்கம் சார்பில் கல்வி வளர்ச்சி நாள் நடந்தது. வட்டார கல்வி அலுவலர்கள் சூர்யா தலைமை வகித்தார். குமார் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் வணக்கமேரி வரவேற்றார். நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், துணை தலைவர் ரமேஷ், லயன்ஸ் பட்டய தலைவர் ராமராஜன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திகேயன் பேசினர்.
தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை மெட்ரிக் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா பள்ளி தலைவர் தாளாளர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. ஆசிரியர் சத்யபிரியா வரவேற்றார். பள்ளி முதல்வர் ஸ்ரீதேவி தொகுத்து வழங்கினார். டாக்டர் ஜெயக்குமார், காஸ்மாஸ் லயன்ஸ் தலைவர் மலைராஜன், செயலாளர் நிட்டில் பேசினர்.
ராம்நகர் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் பள்ளி தாளாளர் அந்தோணி சாமி தலைமையில் நடந்தது. முதல்வர் சூசை மாணிக்கம் முன்னிலை வகித்தார். மாணவர்கள் பட்டிமன்றம் நடந்தது. மாணவி ஜோவிட்டா பேசினார். பரிசுகள் வழங்கினர். ஆசிரியர்கள் ஆரோக்கிய ஜாக்லின், ஜான்சிராணி உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
காரைக்குடி
காரைக்குடி சந்தைப்பேட்டை காமராஜர் பள்ளியில் உள்ள காமராஜர் சிலைக்கு காங்., சார்பில் மாங்குடி எம்.எல்.ஏ., தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் சஞ்சய்காந்தி, நகரத் தலைவர் பாண்டி மெய்யப்பன், பொதுச் செயலாளர் குமரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
த.வெ.க., சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
த.மா.கா.,சார்பில் மாவட்டத் தலைவர் ராஜலிங்கம், ஒழுங்கு நடவடிக்கை குழு துரை கருணாநிதி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக் பள்ளியில் காமராஜரின் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் குமார் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி கட்டுரை, ஓவியம் உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தது.
காரைக்குடி முத்துப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை பாலாதிரிபுரசுந்தரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பரிசு, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.