/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போக்சோவில் சிக்கிய முதியவர் தற்கொலை
/
போக்சோவில் சிக்கிய முதியவர் தற்கொலை
ADDED : ஆக 15, 2025 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:சிவகங்கை அழகு மெய்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் செல்வமணி 70. இவரது மகன்கள் வெளியூரில் வசிக்கின்றனர். இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இவர் மீது சிவகங்கை மகளிர் போலீசார் ஆக., 5ல் 7 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட செல்வமணி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய அவர் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இன்ஸ்பெக்டர் அன்னராஜ், போலீசார் விசாரித்து வருகின்றனர்.