ADDED : நவ 20, 2025 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே டி.பாப்பான்குளம் விலக்கில் டூவீலர் மீது கார் மோதியதில் எலக்ட்ரீசியன் உயிரிழந்தார்.
தூதையைச் சேர்ந்தவர் கண்ணன் 56, நேற்று மதுரை - - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் டி.பாப்பான்குளத்தை டூவீலரில் கடக்க முயன்றார். அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து கோவை சென்ற கார் டூவீலர் மீது மோதியதுடன் சாலையோரம் நின்றிருந்த சரக்கு வேன் மீதும் மோதியது. இதில் டூவீலரில் சென்ற கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், சரக்கு வேனில் இருந்த முத்துராஜா, சேகர்,அன்னலட்சுமி, ஜனனி, அடைக்கலம், பெத்தம்மாள் காயமடைந்தனர். திருப்புவனம் போலீசார் கார் டிரைவர் கோவை சூலூரைச் சேர்ந்த ராமிடம் விசாரிக்கின்றனர்.

