/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புல்வநாயகி அம்மன் கோயிலில் ஆனி திருவிழா தேரோட்டம் இன்று தீர்த்தவாரி உற்ஸவம்

ADDED : ஜூலை 10, 2025 02:54 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயில் ஆனி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட பாகனேரி புல்வநாயகி அம்மன் கோயிலில் ஜூன் 30 அன்று கொடியேற்றத்துடன் ஆனி திருவிழா துவங்கியது. தினமும் காலை, இரவு அம்மன் யானை, சிம்மம், பூப்பல்லக்கு வாகனங்களில் திருவீதி உலா வந்தார். ஒன்பதாம் நாளை முன்னிட்டு ஜூலை 8 ம் தேதி மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் புல்வநாயகி அம்மன் எழுந்தருளினார். அம்மனுக்கு சிறப்பு அபிேஷக,ஆராதனை நடந்தது.
அன்று மாலை 5:45 மணிக்கு சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேர் நான்கு ரத வீதிகளை வலம் வந்து மாலை 6:15 மணிக்கு நிலையை அடைந்தது. தேரோட்ட விழாவில் நாட்டார், நகரத்தார் பங்கேற்றனர். கோயில் கண்காணிப்பாளர் வேல்முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தார். இன்று காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று புல்வநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.