/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஏ.டி.எம்.,மில் பணத்தை நிரப்பி சாவி எடுக்க மறந்த ஊழியர்கள்
/
ஏ.டி.எம்.,மில் பணத்தை நிரப்பி சாவி எடுக்க மறந்த ஊழியர்கள்
ஏ.டி.எம்.,மில் பணத்தை நிரப்பி சாவி எடுக்க மறந்த ஊழியர்கள்
ஏ.டி.எம்.,மில் பணத்தை நிரப்பி சாவி எடுக்க மறந்த ஊழியர்கள்
ADDED : ஜன 12, 2025 08:27 AM

காரைக்குடி : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்., மிஷினில், ஊழியர்கள் பணம் நிரப்பி விட்டு சென்ற நிலையில், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம் என்பவர் பணம் எடுக்க வந்தார்.
மிஷினில் பணம் வைப்பதற்கான லாக்கரில் சாவிக்கொத்து இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த எஸ்.ஐ., ராஜவேல் சாவியை மீட்டதுடன், சம்மந்தப்பட்ட வங்கி ஊழியர்களுக்கு தெரிவித்தார். விரைந்து வந்த ஊழியர்கள் போலீசாரிடம் சாவியை பெற்று, மிஷினில் இருந்த பணத்தை சரி பார்த்தனர்.
வங்கி அதிகாரிகள் கூறுகையில், 'மிஷினில் பணம் வைத்தவர்கள் வெளியே பூட்டப்படும் அவுட்டர் கவர் சாவியை தவறுதலாக மறந்து வைத்து விட்டனர். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. பணம் வைத்தவுடன் அதுவே தானாக லாக் ஆகிவிடும். பணம் வைத்தவர்கள் கூட மீண்டும் திறக்க முடியாது. மும்பையில் இருந்து அனுமதி கொடுத்தால் தான் மீண்டும் திறக்க முடியும்' என்றனர்.