/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தெருக்களில் ஆக்கிரமிப்பு தீயணைப்பு வாகனம் திணறல்
/
தெருக்களில் ஆக்கிரமிப்பு தீயணைப்பு வாகனம் திணறல்
ADDED : ஜூலை 12, 2025 11:41 PM

திருப்புவனம்: திருப்புவனம் தெருக்களில் ஆக்கிரமிப்பு காரணமாக தீவிபத்து நடந்த இடத்திற்கு செல்ல முடியாமல் தீயணைப்பு வாகனம் திணறியது.
திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மதுரை நகருக்கு அருகாமையில் இருப்பதால் திருப்புவனத்தில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
பொதுப்பாதையை ஆக்கிரமித்து பலரும் வீடுகள், வணிக வளாகங்கள் கட்டியுள்ளனர். வீடுகளின் முன்புற இடங்களை கார் பார்க்கிங் ஆக மாற்றியுள்ளனர். இதனால் பல இடங்களில் ஆட்டோக்கள் கூட செல்ல முடியவில்லை.
சேதுபதி நகர் அருகே கருவேல மர கூட்டத்திற்கு சிலர் தீ வைத்தனர்.
மானாமதுரை தீயணைப்பு வாகனம் உடனடியாக வந்த நிலையில் சேதுபதி நகருக்குள் வாகனம் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் செல்ல முடியவில்லை. வேறு வழியின்றி பாதி துாரத்தில் இருந்து குழாய்களை நீண்ட துாரத்திற்கு இணைத்து தீயை கட்டுப்படுத்தினர்.
நகரில் 15 முதல் 30 அடி அகலம் வரை பொதுப்பாதை இருந்த நிலையில் ஆக்கிரமிப்பு காரணமாக சுருங்கியுள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியவில்லை.