/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் திதி பொட்டலில் ஆக்கிரமிப்பால் சிரமம்
/
திருப்புவனம் திதி பொட்டலில் ஆக்கிரமிப்பால் சிரமம்
ADDED : ஆக 26, 2025 11:53 PM

திருப்புவனம்; திருப்புவனம் திதி பொட்டல் அருகே ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருப்பதால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் செய்த பின் புஷ்பவனேஷ்வரரை வழிபட்டு செல்வது வழக்கம். தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்புவனம் வந்து செல்கின்றனர். திதி பொட்டல் அருகே ரோட்டை ஆக்கிரமித்து பலரும் கடைகள் அமைத்துள்ளனர்.
இந்த வழியாக தேரடி வீதி,போலீஸ் குடியிருப்பு, திருப்புவனம் புதூர் ஆகிய பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். சாலையை ஆக்கிரமித்து கடைகள் இருப்பதால் டூவீலர்கள் கூட சென்று வர முடியவில்லை.
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு திருப்பணிகள் தொடங்கியுள்ளன. திருப்பணி வேலைகளுக்கு தேவையான பொருட்களை லாரிகள் மூலமாக திதி பொட்டல் வழியாகத்தான் கொண்டு செல்ல முடியும், வேறு பாதை இல்லை.
ரோட்டின் இருபுறங்களையும் ஆக்கிரமித்திருப்பதால் வாகனங்கள் சென்று வர முடியாமல் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன. மாவட்ட நிர்வாகம் திதி பொட்டல்அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனங்கள் சிரமமின்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.