/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டையில் ஆக்கிரமிப்புகள் : வருவாய், போலீஸ் நடவடிக்கை தேவை
/
தேவகோட்டையில் ஆக்கிரமிப்புகள் : வருவாய், போலீஸ் நடவடிக்கை தேவை
தேவகோட்டையில் ஆக்கிரமிப்புகள் : வருவாய், போலீஸ் நடவடிக்கை தேவை
தேவகோட்டையில் ஆக்கிரமிப்புகள் : வருவாய், போலீஸ் நடவடிக்கை தேவை
ADDED : செப் 10, 2024 05:24 AM
தேவகோட்டை ஆங்கிலேயர் காலத்தில் உருவான நகரம். இங்கு தான் சுதந்திர கால போராட்டங்கள் நடைபெற்றது.அதன் நினைவாகதான்இன்றைக்கும் தியாகிகள் பூங்கா உள்ளது.
இச்சிறப்பு பெற்ற நகரின் வழியே தான் திருப்புத்தூர், தியாகிகள் ரோடு, பஸ் ஸ்டாண்ட் ஆகிய முக்கிய பகுதிகள் உள்ளன. இங்கு தான் வர்த்தக நிறுவனம், வங்கிகள், பள்ளிகள் செயல்படுகின்றன. இதனால், இப்பகுதி அதிக போக்குவரத்துள்ள ரோடுகளாக காட்சி அளிக்கின்றன.
குறிப்பாக திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை தேவகோட்டை வழியே செல்கிறது. இதனால், ராமேஸ்வரம் செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களின் வரத்தும்அதிகரித்து காணப்படுகின்றன.
இவ்வளவு போக்குவரத்து நெருக்கடி உள்ள ரோட்டில் கடைக்காரர்கள் தங்களது கடைகளுக்கு முன் ரோட்டில் பொருட்களை அடுக்கி, ஆக்கிரமிக்கின்றனர். ரோட்டோரத்தில் தள்ளுவண்டிகளில் பொருட்களை விற்பனை செய்தும் இடையூறு செய்கின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையாக காட்சி அளிக்க வேண்டிய திருப்புத்துார் ரோடு, 15 அடி ரோடாக ஆக்கிரமிப்பால் சுருங்கி விட்டன. இதனால் இங்கு போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வருகின்றன. தியாகிகள் ரோட்டில் தான் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்படுகிறது.
இதனால், தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை இந்தரோட்டில் போக்குவரத்து நெருக்கடிக்கு பஞ்சமே இருக்காது. தியாகிகள் பூங்கா முதல் வாடியார் வீதி வரை பஸ்களை திருப்பக்கூட முடியாத அளவிற்கு கடைகள் ஆக்கிரமித்துள்ளன.
போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில்வைக்கப்படும் சிறு கடைகள் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கையே எடுப்பதில்லை. எனவே தேவகோட்டையில் பாரபட்சமின்றி ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, புதிதாக பொறுப்பேற்றுள்ள சப் கலெக்டர்ஆயுஸ் வெங்கட் வட்ஸ் மற்றும் டி.எஸ்.பி.,நகராட்சி கமிஷனர் ஆகியோர் இணைந்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்.

