ADDED : ஜூன் 07, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழாவை இளையான்குடி கோர்ட் வளாகத்தில் மாவட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவரும் நீதிபதியுமான அறிவொளி,மாவட்ட நீதிபதி பசும்பொன் சண்முகையா, இளையான்குடி நீதிபதி மணி வர்மன் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர்.
விழாவில் வக்கீல்கள், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரமேஷ், எஸ்.ஐ., சிவசுப்பு, எஸ்.ஐ., சுரேஷ்குமார்,இளையான்குடி பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை,வட்ட சட்ட பணிகள் குழு பானுமதி ஆர்த்தி இளவரசன் சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் கலந்து கொண்டனர்.