நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காரைக்குடி அருகே மானகிரியில் மருந்து வணிகர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாநில புரவலர் மனோகரன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு பார்வையாளராக மாநில தலைவர் கோவிந்தராஜன், மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் சொக்கலிங்கம் கலந்து கொண்டனர். புதிய தலைவராக ராகவன், செயலாளர் அருள்ராஜா, பொருளாளர் ராதாகிருஷ்ணன் தேர்வாகினர்.

