/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெயருடன் பிறப்பு சான்று கால அவகாசம் நீட்டிப்பு
/
பெயருடன் பிறப்பு சான்று கால அவகாசம் நீட்டிப்பு
ADDED : நவ 15, 2024 02:38 AM
சிவகங்கை:நாட்டில் அனைத்து அரசு தேவைகளுக்கும் பெயருடன் கூடிய பிறப்பு சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் சான்று பெறுவதற்கு டிச.,31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 2023 அக்., 1 க்கு பிறகு பிறப்பிடம் அறிய, பள்ளியில் சேர்க்க, டிரைவிங் லைசென்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு பெற, பாஸ்போர்ட், திருமண பதிவு செய்ய, மத்திய, மாநில அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற போன்ற அனைத்து அரசுத்துறை சார்ந்த பணிகளுக்கும் பெயருடன் கூடிய பிறப்பு சான்று காட்டாயமாக்கப்பட்டு உள்ளது. குழந்தை பிறந்த தேதியை பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் பதிவு செய்த நாளில் இருந்து 15வயதிற்குள் கட்டாயம் பெயருடன் கூடிய பிறப்பு சான்று பெற்றிருக்க வேண்டும்.
2000 ஜன., 1 க்கு முன் பிறந்த குழந்தைகள், பெயருடன் பிறப்பு சான்று பெற 2014 டிச., 31 வரை கால அவகாசம் அளித்தனர்.
அதற்கு பிறகு மேலும் 5 ஆண்டுக்கு 2019 வரை காலநீட்டிப்பு செய்து பெயருடன் பிறப்பு சான்று பெற வைத்தனர். இந்நிலையில் 15 வயதை கடந்தும் பெயருடன் பிறப்பு சான்று பெறாதவர்களுக்குமீண்டும் வாய்ப்பு அளிக்கும் விதம் 2024 டிச., 31க்குள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், வருவாய், சுகாதாரத்துறை,பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஏற்கனவே பிறப்பை பதிவு செய்து சான்று பெறாத பட்சத்தில் பெயருடன் சான்றினை மீண்டும் பெறலாம் என தெரிவித்துள்ளனர்.
சான்றுக்கு சிறப்பு முகாம்:
மாவட்ட வருவாய் அலுவலர் ஒருவர் கூறியதாவது:
பள்ளிகள் தோறும் சிறப்பு முகாம் நடத்தி பெயருடன் பிறப்பு சான்று இல்லாத மாணவர்களின், பெற்றோர்களை வலியுறுத்தி, சான்று பெற செய்ய வேண்டும். அந்தந்த பிறப்பு சான்று வழங்கும் துறை அலுவலர்கள், பெயருடன் பிறப்பு சான்று வழங்கியதற்கான அறிக்கையை வாரந்தோறும் அரசுக்கு வழங்கப்படும். மாவட்ட வருவாய், சுகாதார, பத்திரப்பதிவு அலுவலர்கள் இம்முகாமை கண்காணிக்க உள்ளனர் என்றார்.