ADDED : அக் 16, 2024 05:29 AM
மதுரை : மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் உரிமத்தை 'ஆன்லைன்' மூலம் மட்டுமே புதுப்பிக்க வேண்டும்' என, தொழிலக பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குனர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பதிவுபெற்ற தொழிற்சாலைகளுக்கும் 2025 ம் ஆண்டுக்கான உரிமத்தை இணையவழி (ஆன்லைன்) மூலம் மட்டுமே புதுப்பிக்க அக்.31 கடைசி. எனவே, மேற்கண்ட 3 மாவட்டங்களில் உள்ள பதிவு பெற்ற தொழிற்சாலைகள் தங்கள் உரிமத்தை 'www.dish.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
படிவம் 2 சமர்ப்பித்த உடனேயே தங்கள் தொழிற்சாலை சட்ட உரிமம் புதுப்பிக்கப்பட்டு, முறைப்படி வழங்கப்படும். இதற்காக அலுவலகத்திற்கு வரவேண்டியதில்லை.
உரிம திருத்தம், மாற்றம் ஆகியவற்றுக்கும் இணைய வழியில் விண்ணப்பித்து, உரிம கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி அதன் 3 நகல்கள் (படிவம் 2) மற்றும் இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது நகல், சான்றாவணம் இணைத்து அனுப்ப வேண்டும். உரிய காலத்தில், உரிம கட்டணம் இணைய வழியிலேயே செலுத்தி உரிமம் பெறலாம் என தெரிவித்துள்ளார்.