ADDED : ஜன 22, 2025 09:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மதகுபட்டி அருகேயுள்ள சடையன்பட்டியை சேர்ந்தவர் விவசாயி சேவுகப்பெருமாள் 60. இவர் இவரது ஊருக்கு அருகில் ஆடு, மாடு வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு வந்து இரவு உணவு எடுத்துக்கொண்டு மீண்டும் தொழுவத்திற்கு சென்றார்.
நீண்ட நேரமாகியும் சேவுகப்பெருமாள் வீட்டிற்கு வராததால் அவரது மகள் தொழுவத்திற்கு சென்று பார்த்தார். அங்கு இல்லாததால் அருகில் காட்டு நாச்சியம்மன் கோவில் பகுதியில் தேடியுள்ளார்.
அங்குள்ள ஊருணியில் சேவுகப்பெருமாள் கைலியும் சட்டையும் கிடந்துள்ளது. சேவுகப்பெருமாள் மனைவி ராக்கு 50 போலீசில் புகார் அளித்தார்.
தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குளத்தில் மூழ்கிய சேவுகப் பெருமாள் உடலை மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.