/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெல் கொள்முதல் நிலையங்களில் கட்சியினர் கட்டாய வசூல் விவசாயிகள் சங்கத்தினர் புகார்
/
நெல் கொள்முதல் நிலையங்களில் கட்சியினர் கட்டாய வசூல் விவசாயிகள் சங்கத்தினர் புகார்
நெல் கொள்முதல் நிலையங்களில் கட்சியினர் கட்டாய வசூல் விவசாயிகள் சங்கத்தினர் புகார்
நெல் கொள்முதல் நிலையங்களில் கட்சியினர் கட்டாய வசூல் விவசாயிகள் சங்கத்தினர் புகார்
ADDED : பிப் 01, 2025 02:04 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூடைக்கு (40 கிலோ) ரூ.25 முதல் 40 வரை அரசியல் கட்சியினர் கட்டாய வசூல் செய்வதாக தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
இம்மாவட்டத்தில் மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவ மழையால் வைகை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம், கண்மாய் பாசனம் மூலம் விவசாயிகள் 1.95 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்திருந்தனர்.
தற்போது நெல் அறுவடை செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கொள்முதல் நிலையங்களில் வழங்கி வருகின்றனர்.
இதற்காக இம்மாவட்டத்தில் 50 கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது. மேலும் 30 கொள்முதல் நிலையங்கள் திறக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
விவசாயிகள் வழங்கும் நெல் (100 கிலோ) மூடைக்கு முதல் ரகத்திற்கு ரூ.2,450, சன்னரகத்திற்கு ரூ.2,405 வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
விவசாயிகள் தரும் நெல்லை காயவைத்து துாசி தட்டி மூடை அடுக்கி, லாரியில் ஏற்றும் வரை மூடைக்கு (40 கிலோ) ரூ.12 வரை நுகர்பொருள் வாணிப கழகம் லோடுமேன்களுக்கு சம்பளமாக வழங்குகிறது. இதற்கு மேல் விவசாயிகளிடம் ஒரு ரூபாய் கூட வாங்க கூடாது என கண்டிப்பான உத்தரவு அமலில் உள்ளது.
கடந்த ஆண்டு (2023-- 2024) நுகர்பொருள் வாணிப கழகம் 31,133 டன் வரை கொள்முதல் செய்தது. இந்தாண்டு 50 ஆயிரம் டன் வரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் முகாமிடும் அரசியல் கட்சியினர், கட்சிக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் வழங்க வேண்டும் எனக்கேட்டு விவசாயிகளிடம் மூடைக்கு (40 கிலோ) ரூ.25 முதல் 40 வரை வசூலிப்பதாக கலெக்டர் ஆஷா அஜித்திடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
விசாரித்து நடவடிக்கை
இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ''கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கட்டாய வசூலில் ஈடுபடும் அரசியல் கட்சியினர் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.