/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கால்நடை மருத்துவர் பற்றாக்குறையால் விவசாயிகள் தவிப்பு
/
கால்நடை மருத்துவர் பற்றாக்குறையால் விவசாயிகள் தவிப்பு
கால்நடை மருத்துவர் பற்றாக்குறையால் விவசாயிகள் தவிப்பு
கால்நடை மருத்துவர் பற்றாக்குறையால் விவசாயிகள் தவிப்பு
UPDATED : ஜூன் 21, 2025 04:58 AM
ADDED : ஜூன் 21, 2025 12:14 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி கால்நடை மருத்துவமனைகளில் டாக்டர்கள் பற்றாக்குறையால் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, பிரான்மலை, ஏரியூர் பகுதியில் ஏராளமான கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. இது தவிர சுற்றுவட்டாரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் கடைவீதியிலும், கிராமங்களிலும் திரிகின்றன. இப்பகுதியில் உள்ள ஆடு, கோழி மற்றும் மாடுகளுக்கு சிகிச்சை பெற சிங்கம்புணரி, முறையூர், பிரான்மலை ஆகிய அரசு கால்நடை மருத்துவமனைகளுக்கு வரவேண்டி உள்ளது.
கூடுதல் டாக்டர்கள் இல்லாமல் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்பட்டு கால்நடைகள் இறக்க நேரிடுகிறது. குறிப்பாக ஆயிரக்கணக்கில் கோயில் மாடுகள் திரியும் சிங்கம்புணரி பகுதிக்கான மருத்துவமனையில் ஒரு பெண் டாக்டரும், ஒரு பெண் உதவியாளரும் மட்டுமே இருக்கின்றனர்.
கால்நடைகளுக்கு, குறிப்பாக மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க பெண் மருத்துவர்கள் சிரமப்படுகின்றனர். இங்கு பணியாற்றிய பெண் டாக்டர் விடுப்பில் சென்றுவிட்ட நிலையில் பக்கத்து ஊர் மருத்துவமனைகளில் இருந்து டாக்டர் அல்லதுஉதவியாளர் வந்து சிகிச்சை அளிக்கின்றனர். இதனால் காலதாமதம் ஏற்பட்டு அவசர காலங்களில் கால்நடைகளை காப்பாற்ற முடியாமல் போகிறது.
மருத்துவமனைக்கு கொண்டுவர முடியாத மாடுகளுக்கு வீடுகளில் நேரடியாக சென்று சிகிச்சை அளிப்பது வழக்கம். ஆனால் தற்போது டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கிராமங்களுக்கும் வீடுகளுக்கும் சென்று சிகிச்சை அளிக்க முடியாத சூழல் உள்ளது.
தினேஷ், சமூக ஆர்வலர், சிங்கம்புணரி: விவசாய பகுதியான இத்தாலுகாவில் ஏராளமான ஆடு, கோழி, மாடுகள் வளர்க்கப்படுகின்றன. இதை தவிர நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளும் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.
சிங்கம்புணரி உள்ளிட்ட கால்நடை மருத்துவமனைகளில் கூடுதல் டாக்டர்கள் குறிப்பாக ஆண் டாக்டர் இல்லாததால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம், தொய்வு ஏற்படுகிறது. சில நேரங்களில் கால்நடைகள் உயிர்இழப்பதும் தொடர்கிறது.
மாடுகள் கன்றுகளை ஈனும் போது கர்ப்பப்பை வெளியே வந்து விடுகிறது, அவற்றை மீண்டும் உள்ளே தள்ளி உரிய முறையில் சிகிச்சை அளிக்க கூடுதல் டாக்டர்களும், அறுவை சிகிச்சை டாக்டர்களும் இப்பகுதிக்கு தேவை.
பல இடங்களில் பெண் டாக்டர்கள், பெண் உதவியாளர்களாக இருப்பதால் அவர்களால் ஆக்ரோஷமானமாடுகளை கட்டுப்படுத்தி சிகிச்சை அளிக்கவும், அனைத்து பணிகளை செய்யவும் முடியவில்லை.