/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
துார்வாரியும் பயனில்லை என விவசாயிகள் புலம்பல்! கண்மாய் கரைகளில் மரங்கள் வெட்டப்படுவதால்

ADDED : ஜூன் 14, 2024 10:18 PM

இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதுார் ஒன்றியங்களில் 100க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை கண்மாய்கள் உள்ளன. இது தவிர ஊராட்சி ஒன்றியம் கட்டுப்பாட்டிலும், ஜமீன் கண்மாய்களும் உள்ளன.
கடந்த ஆட்சியில் பல கண்மாய்களில் குடிமராமத்து பணி நிறைவு பெற்றது. ஏற்கனவே கண்மாய்களில் கரைகளை பலப்படுத்துவதற்காக பனை, வேம்பு நாட்டுக்கருவேலம் உள்ளிட்ட மரங்களை முன்னோர்கள் நட்டு வைத்திருந்தனர். இதனால் மழையின் போது மண் அரிப்பு தடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சில ஆண்டுகளாக பல கண்மாய்களின் கரைகளில் உள்ள மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் கண்மாய் மரங்களை ஏலம் எடுப்பவர்கள் கரையில் உள்ள மரங்களையும் வெட்டி எடுத்துச் சென்று விடுகின்றனர்.
இதனால் பல கண்மாய்களின் கரைகளில் ஒரு மரம் கூட இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு கரைகள் அடிக்கடி பலவீனப்பட்டு வருகிறது. மண் அரிப்பால் மடைகள் சேதம் ஆவதுடன் கண்மாய்களில் தேக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைய வாய்ப்புஉள்ளது.
எனவே அனைத்து கண்மாய் கரைகளிலும்உள்ள மரங்களை வெட்டாதவாறு நடவடிக்கை எடுப்பதுடன் கூடுதலாக மரங்களை நடவு செய்து உருவாக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.