/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டோல்கேட்களில் 'பாஸ்ட் டாக்' ஸ்கேனர் கருவி ஆக. 15 ல் அமலுக்கு வருகிறது
/
டோல்கேட்களில் 'பாஸ்ட் டாக்' ஸ்கேனர் கருவி ஆக. 15 ல் அமலுக்கு வருகிறது
டோல்கேட்களில் 'பாஸ்ட் டாக்' ஸ்கேனர் கருவி ஆக. 15 ல் அமலுக்கு வருகிறது
டோல்கேட்களில் 'பாஸ்ட் டாக்' ஸ்கேனர் கருவி ஆக. 15 ல் அமலுக்கு வருகிறது
ADDED : ஜூலை 20, 2025 11:23 PM

திருப்பாச்சேத்தி,: தமிழகம் முழுவதும் டோல்கேட்களை கடக்கும் வாகனங்களில் 'பாஸ்ட் டாக்' ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் நான்கு, ஆறு, எட்டு வழிச்சாலை மற்றும் விரைவுச் சாலைகளை கடக்கும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டோல்கேட்களில் தற்போது கவுண்டர்களின் மேற்பகுதியில் ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டு பாஸ்ட் டாக் ஸ்கேன் செய்யப்பட்டு வாகனங்கள் அனுப்பபடுகின்றன.
இவற்றால் மிகவும் தாமதம் ஆவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு எழுப்பியதை தொடர்ந்து நவீன ஸ்கேனர்கள் தமிழகம் முழுவதும் உள்ள டோல்கேட்களில் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் மூவாயிரம் ரூபாய் செலுத்தி ஒரு வருடத்திற்கு அல்லது 200 டிரிப்புகள் சென்று வரலாம். வணிக ரீதியில் இல்லாத வாகனங்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் புதிய வருடாந்திர பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருடாந்திர பாஸ்ட் டாக் ஸ்டிக்கரை முன்புற கண்ணாடியில் தெளிவாக தெரியும் வண்ணம் ஒட்ட வேண்டும், வருடாந்திர பாஸ் பெறும் வாகனங்கள் ஏற்கனவே பிளாக் லிஸ்ட்டில் இருந்திருக்க கூடாது, வாகனத்தின் பதிவு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும், வருடாந்திர பாஸ் ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இணையதளம் மூலம் மட்டுமே செயல்படுத்த முடியும். விரைவாக ஸ்கேன் செய்யவும், வாகனங்கள் தாமதமின்றி டோல்கேட்களை கடக்கவும் புதிய ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.
திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் மொத்தமுள்ள 11 பாதைகளில் பத்து பாதைகளில் இந்த ஸ்கேனர் பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாகனங்கள் தாமதமின்றி டோல்கேட்களை கடக்க முடியும். வருடாந்திர பாஸ் திட்டம் ஆக., 15 முதல் செயல்பாட்டிற்கு வருகிறது.

