/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் முள் படுக்கையில் பெண் சாமியார் தவம்

ADDED : ஜன 03, 2025 12:17 AM

திருப்புவனம்,:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் முன்பு முள்படுக்கையில் பெண் சாமியார் நாகராணி அம்மையார் 57, சாமியாடி தவம் செய்ததை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடக்கும்.
முத்துமாரியம்மனுக்கு நாகராணி அம்மையார் தினசரி பூஜை செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் மார்கழியில் நடக்கும் மண்டல பூஜை இங்கு பிரசித்தி பெற்றது. இந்தாண்டு மண்டல பூஜையை முன்னிட்டு நேற்று காலை முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
காலை 9:00 மணி முதல் சிறப்பு பூஜைகள் துவங்கின. மண்டல பூஜையை முன்னிட்டு நாகராணி அம்மையார் முள் படுக்கையில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். நேற்று கோயில் முன் ஏழு அடி உயரத்தில் கத்தாழை, சப்பாத்தி கள்ளி, உடைமுள் , கருவேல மர முள் உள்ளிட்டவைகளால் படுக்கை தயார் செய்யப்பட்டது. நேற்று காலை நாகராணி அம்மையார் முள் படுக்கையில் ஏறி அமர்ந்து சாமியாடி தவம் செய்தார். ஏற்பாடுகளை நிர்வாகிகள் சோமசுந்தரம், முத்துராமலிங்கம் உள்ளிட்ட பக்தர்கள் செய்தனர்.