தேவகோட்டை: தேவகோட்டை தாலுகா கண்ணங்குடியில் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தில் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் அலுவலர்கள் வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர். துணை இயக்குநர் சண்முக ஜெயந்தி தலைமை வகித்தார்.
ஆய்வின் போது, நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் அதிகமான நீரை தேக்கி வைப்பதால் புகையான் தாக்குதல் மற்றும் துார் கட்டும் பருவத்தில் ஆனைக்கொம்பன் ஈ பயிர்களை தாக்கும் நிலை உருவாகும்.
இதை கட்டுப்படுத்த மண் பரிசோதனை செய்து முடிவில் தழைச்சத்து இட வேண்டும். மஞ்சள் வண்ண ஒட்டுப் பொறி ஏக்கருக்கு 12 வீதம் வைக்க வேண்டும் என அலுவலர்கள் வலி யுறுத்தினர்.
சேது பாஸ்கரா வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவி பேராசிரியர் மகேஸ்வரன், வேளாண் அலுவலர் சிவபிர்யதர்ஷினி, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா, உதவி மேலாளர் சதீஷ்குமார் செயல் விளக்கம் அளித்தனர்.

