ADDED : நவ 21, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா கல்வி குழுமத்தின் விவேகானந்தா குளோபல் நர்சிங் கல்லுாரி திறப்பு விழா நடந்தது.
முதல்வர் பரமேஸ்வரி வரவேற்றார். விவே கானந்தா கல்விக்குழுமத் தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை தலைவர் டாக்டர் குமரேசன், புதுக்கோட்டை வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனத் தலைவர் கருப்பையா, தலைமைப் பயிற்றுநர் பொறியாளர் செல்வராஜ், பயிற்றுநர்கள் சண்முகம், தேவராஜன் ஆய்வகம், நூலகம் திறந்து வைத்தனர்.
விவேகானந்தா கல்வி அறக்கட்டளை இயக்குனர்கள் உருமநாதன், ஜெரால்டு, ராஜகோபால், சேதுராமாயி சொக்கலிங்கம், வாசுகி உருமநாதன் பங்கேற்றனர். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சசிக்குமார் வாழ்த்தினார்.

