/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தீயணைப்புத்துறை வெள்ள மீட்பு செயல் விளக்கம்
/
தீயணைப்புத்துறை வெள்ள மீட்பு செயல் விளக்கம்
ADDED : அக் 03, 2024 04:35 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் விழிப்புணர்வுக்கு தீயணைப்புத் துறையினர் சீதளிக்குளத்தில் ஒத்திகை செய்து மக்களுக்கு விழிப்புணர்வு அளித்தனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக். ல் 3வது வாரத்தில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்த மழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள்,பாதிப்பு குறித்தும், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் நேற்று ஒத்திகை நிகழ்வை சீதளிகுளத்தில் நிகழ்த்தினர்.
நிலைய அலுவலர் ஆனந்த சுப்பிரமணியன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர். வெள்ள பகுதி மற்றும் ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றில் சிக்கியவர்களை மீட்கும் வழிமுறை, வீட்டில் உள்ள பொருட் களை வைத்து வெள்ளத்திலிருந்து பாதுகாத்து கொள்வது குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.