ADDED : ஜூலை 18, 2026 01:20 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையம் சார்பாக தீ விபத்து ஒத்திகை பயிற்சி நடந்தது.
உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சியை வழங்கினர். நிலைய மருத்துவர் முகமது ரபி, உதவி நிலை மருத்துவர் தென்றல், வெங்கடேஷ், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் அண்ணாமலை, அஜித்குமார் கலந்து கொண்டனர்.
ஒத்திகை பயிற்சியில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி பாதுகாத்துக் கொள்வது, மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், பொதுமக்களை பாதுகாப்பாக எப்படி மீட்பது, தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து அறிந்து கொண்டனர்.
