/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை - சிவகங்கை ரோட்டில் தைல மரக்காட்டில் தீ வைப்பு
/
மானாமதுரை - சிவகங்கை ரோட்டில் தைல மரக்காட்டில் தீ வைப்பு
மானாமதுரை - சிவகங்கை ரோட்டில் தைல மரக்காட்டில் தீ வைப்பு
மானாமதுரை - சிவகங்கை ரோட்டில் தைல மரக்காட்டில் தீ வைப்பு
ADDED : மார் 18, 2025 06:00 AM

மானாமதுரை: மானாமதுரை சிவகங்கை ரோட்டில் தைலமர காட்டில் தீ வைக்கப்பட்டதால் 5 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.
மானாமதுரை, சிவகங்கை ரோட்டில் கொன்னக்குளம், உருளி உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் தைல மரங்களை வளர்த்து வருகின்றனர். தைல மரங்களை வளர்ப்பதால் மானாமதுரை செய்களத்துார் குரூப்பிற்குட்பட்ட பல்வேறு கிராம கண்மாய்களுக்கு நீர்வரத்து இல்லாமல் போனதை தொடர்ந்து இதனை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் நீண்ட வருடமாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 2:00 மணிக்கு இப்பகுதியில் உள்ள தைல மர காட்டில் தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
மானாமதுரை தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் மற்றும் வீரர்கள், வனத்துறை அதிகாரிகள் உடனடியாக எரிந்த தீயை போராடி அனைத்தனர்.