/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாம்புகளை பிடிப்பதில் சிக்கல் தவிக்கும் தீயணைப்பு துறையினர்
/
பாம்புகளை பிடிப்பதில் சிக்கல் தவிக்கும் தீயணைப்பு துறையினர்
பாம்புகளை பிடிப்பதில் சிக்கல் தவிக்கும் தீயணைப்பு துறையினர்
பாம்புகளை பிடிப்பதில் சிக்கல் தவிக்கும் தீயணைப்பு துறையினர்
ADDED : செப் 23, 2024 06:05 AM
திருப்புவனம் : திருப்புவனம் பகுதியில் வீடுகள், கடைகளில் புகும் பாம்புகளை பிடிப்பதற்கு தீயணைப்பு துறையினர் தயக்கம் காட்டுகின்றனர்.
ஏப்ரல், மே மாதங்களைப் போல வெயிலின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் விலங்குகளும் பறவைகளும் இதற்கு தப்பவில்லை. வெயிலின் தாக்கம் தாங்காமல் இருப்பிடத்தை விட்டு வெளியேறும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுகின்றன.
உலகில் சமநிலை பேண அனைத்து ஜீவராசிகளும் வாழ வேண்டும் என்ற எண்ணம் வலுத்து வரும் நிலையில் பாம்புகளை கண்டால் அவற்றை பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்த தீயணைப்பு துறை வீரர்கள் அல்லது பாம்பு பிடி வீரர்களை பொதுமக்கள் நாடுகின்றனர். சமீப காலமாக பாம்புகளை பிடிக்க தீயணைப்பு துறையினர் ஆர்வம் காட்டாமல் பாம்பு பிடிப்பவர்களை அழைக்குமாறு தெரிவித்து விடுகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பாம்பு பிடி வீரர்களை தேடி அலையவேண்டியுள்ளது. இரு நாட்களுக்கு முன் திருப்பாச்சேத்தியில் வீட்டில் பாம்பு புகுந்ததை தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் தேடி விட்டு திரும்பி சென்று விட்டனர்.
கழுகேர்கடை ரேசன் கடையில் பாம்பு புகுந்த போது பாம்பு பிடி வீரரை அனுப்பி வைத்தனர். இதுபோன்று சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் வீடுகள், கடைகளில் புகும் பாம்புகளை பிடிக்க தீயணைப்பு துறையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் கூறியதாவது: பாம்புகளை பிடிக்க நவீன கருவி உள்ளது. . பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவித்து விடுகிறோம்.
சமீப காலமாக உயர் அதிகாரிகள் பாம்புகளை பிடிப்பது வனத்துறை பணி. பாம்பு பிடிப்பதற்காக போகும்போது வேறு சாலை விபத்து, தீ விபத்து உள்ளிட்ட சம்பவங்களுக்கு உடனடியாக செல்ல முடியவில்லை.
எனவே பாம்புகளை பிடிக்க போக வேண்டாம். தகவல் வந்தால் வனத்துறைக்கு தெரிவித்து விடுங்கள் என கூறுகின்றனர். ஆனால் பொதுமக்கள் பாம்பு, மரநாய் வந்தால் தீயணைப்பு துறையினரையே அழைக்கின்றனர்.
எனவே நாங்கள் பாம்புகளை பிடிக்க முடியாமல் தவிக்கின்றோம் என்றனர்.