/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை பகுதிகளில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; இரு கரைகளையும் தொட்டு செல்லும் வெள்ள நீர்

ADDED : அக் 28, 2024 07:10 AM

மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்வதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே மூலவைகையில் உருவாகும் ஆறு, வைகை அணையை அடைந்து அங்கிருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வழியாக ராமநாதபுரத்தில் கடலில் கலக்கிறது. , ராமநாதபுரம் ஆகிய உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வழியாக சென்று ராமநாதபுரம் அருகே கடலில் கலக்கிறது.
வைகை ஆற்று நீர் மூலம் 5 மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான எக்டேர் பரப்பளவு உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது தவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். கடந்தசில நாட்களாக தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருவதால், ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
* மானாமதுரை வைகையில் வெள்ளம்:
தற்போது மானாமதுரை வைகை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து, இரு கரைகளையும் தொட்டி கரைபுரண்டு செல்கிறது. இதனால், இப்பகுதி விவசாய கிணறுகள், குடியிருப்பு பகுதியில் உள்ள ஆழ்துழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் மகிழ்ச்சி:
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
மானாமதுரையில் வைகை பூர்வீக பாசன விவசாயிகள் போதிய மழையின்றி, தவித்து வந்தோம். கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து ஆற்றில் வெள்ள நீர் வருவதால், அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பி, விவசாயம் செழிக்கும், என்றனர்.
///