sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காந்தி ஜெயந்தி விழா..

/

காந்தி ஜெயந்தி விழா..

காந்தி ஜெயந்தி விழா..

காந்தி ஜெயந்தி விழா..


ADDED : அக் 03, 2024 04:41 AM

Google News

ADDED : அக் 03, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: மகாத்மா காந்தி 156வது பிறந்த தினத்தையொட்டி சிவகங்கை நகர் அரண்மனை வாசலில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கலெக்டர் ஆஷா அஜித், நகராட்சி தலைவர் துரைஆனந்த், கமிஷனர் கிருஷ்ணாராம், மேலாளர் கென்னடி, கவுன்சிலர்கள் ஜெயகாந்தன், ராமநாதன், அயூப்கான், தி.மு.க., நிர்வாகிகள் வீரக்காளை, ஜெயகுமார் கலந்துகொண்டனர்.

காங்., கட்சி சார்பில் நகர் தலைவர் விஜயகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். வட்டார தலைவர் உடையார், வெள்ளைச்சாமி, மோகன்ராஜ், சண்முகராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையது இப்ராஹீம், மகளிர் காங்., இமய மடோனா, மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி செயலர் சேகர் தலைமை வகித்து மகாத்மா காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தலைமை ஆசிரியர் தியாகராஜன், உடற்கல்வி ஆசிரியர் தடியப்பன், சரவணன், ஆசிரியர்கள் சந்திரசேகர், மகரஜோதி, சக்திவேல், ஜெயமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேவகோட்டை


தேவகோட்டையில் காந்தி பூங்காவில் அவரது சிலைக்கு நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், கவுன்சிலர் வடிவேல்முருகன் உட்பட பொது மக்கள் மரியாதை செய்தனர்.

லயன்ஸ் சங்கம் சார்பில் தலைவர் செல்லையா தலைமையில் மரியாதை செய்தபின் அமராவதி புதூர் அரசு காசநோய் மருத்துவமனை நோயாளிகளுக்கு உணவு வழங்கினர்.

அரிஸ்டோ லயன்ஸ் சங்கம் சார்பில் பட்டயத் தலைவர் ராம்ராஜ் தலைமையில் மரியாதை செலுத்தியதை தொடர்ந்து சங்கத்தினர் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கும், அருகில் உள்ள பனிப்புலான்வயல் புனித மாதா சர்ச்சில் உள்ள மன நலம் பாதித்தவர்களுக்கும் உணவு வழங்கினர்.

காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் தலைவர் பாலமுருகன் தலைமையில் மரியாதை செலுத்தினர்.






      Dinamalar
      Follow us