ADDED : ஜன 06, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, சுற்று பகுதிகளில் நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமாரின் மகன் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதில் இசை அமைப்பாளரும், நடிகருமான கங்கை அமரனும் நடித்து வருகிறார். நேற்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு அவர் ஓட்டலுக்கு ஓய்வெடுக்க சென்றார். படத்தயாரிப்பு நிறுவனத்தினர் கூறியதாவது,'கங்கை அமரன் தற்போது நலமுடன் உள்ளார். வழக்கம் போல் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும்,' என்றனர்.

