/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தள்ள முடியாத வண்டியில் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள்
/
தள்ள முடியாத வண்டியில் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள்
தள்ள முடியாத வண்டியில் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள்
தள்ள முடியாத வண்டியில் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள்
ADDED : டிச 17, 2024 03:56 AM
சிவகங்கை: சிவகங்கை நகராட்சியில் 27 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று தள்ளுவண்டியில் குப்பையை சேகரிப்பதில் சிரமம் இருப்பதாக துாய்மை பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை நகராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியில் 14 ஆயிரத்து 771 குடியிருப்புகளும், ஆயிரத்து 34 வணிக நிறுவனங்களும் உள்ளது.
குடியிருப்பு பகுதி, வணிக நிறுவனங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 13 டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பையை சேகரிப்பதற்கு சிவகங்கை நகராட்சியில் 19 தள்ளுவண்டி, 17 பேட்டரி வாகனம், 7 ஆட்டோ உள்ளது.
வீடு வீடாகச் சென்று தள்ளுவண்டியில் குப்பையை சேகரிக்கும் பணியில் பெரும்பாலும் பெண்களே உள்ளனர். ஒரு தள்ளுவண்டியில் 100 வீடுகளில் குப்பைகளை அந்த பெண் தான் சேகரிக்க வேண்டும். வீடுகளில் அன்றாட சேகரமாகும் கழிவுகளை அவர்களே மக்கும் மக்கா குப்பையாக சேகரிக்க வேண்டும்.
குப்பை சேகரிக்க பயண்படுத்தும் தள்ளுவண்டி மிகவும் மோசமான நிலையில் இருப்பதோடு, பெரும்பாலான குறுகிய தெருக்கள்குண்டும் குழியுமாக இருப்பதால் தள்ளுவண்டியை குப்பையுடன் தள்ளி செல்வது மிக கடினமான பணி யாகும். இந்த தள்ளுவண்டிகளை மாற்றிவிட்டு அனைவருக்கும் பேட்டரி வாகனம் வழங்கினால் குப்பையை எளிதாக எடுத்துச் செல்ல முடியும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
சுகாதார அலுவலர் அப்துல்ஜாபர் கூறுகையில், நகராட்சியில் 17 பேட்டரி வாகனம் உள்ளது. தற்போது கூடுதலாக 10 பேட்டரி வாகனம் கேட்டு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு கடிதம் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பகுதியிலும் பேட்டரி வாகனத்தின் மூலம் குப்பை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.