/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூரில் குவிந்த குப்பை; விரைவாக அகற்ற கோரிக்கை
/
திருக்கோஷ்டியூரில் குவிந்த குப்பை; விரைவாக அகற்ற கோரிக்கை
திருக்கோஷ்டியூரில் குவிந்த குப்பை; விரைவாக அகற்ற கோரிக்கை
திருக்கோஷ்டியூரில் குவிந்த குப்பை; விரைவாக அகற்ற கோரிக்கை
ADDED : மார் 19, 2025 06:47 AM
திருக்கோஷ்டியூ : திருக்கோஷ்டியூரில் தெப்ப உற்ஸவம் முடிந்து நான்கு நாட்களாகியும் குப்பையை முழுமையாக அகற்றாமல் உள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திருக்கோஷ்டியூரில் மாசி தெப்ப உற்ஸவம் 11 நாட்கள் நடந்தது. கோயிலிலிருந்து தி.வைரவன்பட்டி தெப்பக்குளம் வரை பக்தர்கள் நடமாட்டம் காணப்பட்டது. இப்பகுதியில் குப்பை அதிகமாக சேகரமானது.
குறிப்பாக அன்னதான தட்டுக்கள், பிளாஸ்டிக் டம்ளர், பாலிதீன் பைகள் அதிகமாக சேர்ந்துள்ளது.
தற்போது உற்ஸவம் நிறைவடைந்த நிலையில் திருக்கோஷ்டியூர் பகுதியில் குப்பைகள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளன. கோயில் நிர்வாகத்தினர் குப்பைகளை அகற்றும் பணியைத் துவங்கியுள்ளனர். தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன் கூறுகையில், இந்தாண்டு வழக்கத்தை விட 25 சதவீதம் கூடுதலாக பக்தர்கள் வந்தனர். மாசி மகம் முன்பிலிருந்தே அதிகரித்த கூட்டம் தீர்த்தவாரி வரை காணப்பட்டது. கோயில் நடை கூடுதல் நேரம் திறக்கப்பட்டது. இதனால் அதிகமான குப்பை சேர்ந்துள்ளது. கோயிலினுள் உள்ள குப்பை அகற்றப்பட்டு விட்டது. தற்போது தெப்பக்குள பகுதியிலிருந்து குப்பை அகற்றப்பட்டு வருகிறது. விரைவில் முழுமையாக அகற்றப்படும்' என்றார்.